Pages

Wednesday 9 March 2011

என் எண்ணம்

எனது எண்ணத்தில் பிறந்த சில வரிகள்..

பிறந்து விட்டோம் இந்த பூமியிலே..
குழந்தைக்கு இந்த பூமி ஒரு விசித்திர பொருள்.
வளரும் குழந்தைக்கு இந்த பூமி ஒரு விளையாட்டு பொம்மை..
ஐய்ந்து வயதில் அண்மிக்கிறான் கல்வியை..
அங்கே அவனுக்கு தொடங்குகின்றது போட்டி...
வெல்லும் நோக்கத்தை மட்டுமே கொண்டு அவனது வாழ்க்கை நகர தொடங்குகின்றது...
போட்டி என்னும் புள்ளியிலே பல மனங்களை கொண்ட மனிதன் வெளியே வருகிறான்..
பொறாமை, வஞ்சகம், கர்வம், கொடூரம் போன்ற மனங்கள் அவனை ஆட்கொண்டு விடுகின்றது..
கொள்கையில் ஜெயித்தவன் தன் வாழ்வை நினைத்து மகிழ்ச்சி கொள்வதோடு நின்றுவிடாமல் மேலும் தேடலில் தனது ஆசைகளை பறக்க விடுகிறான்... இது ஒரு பாதை.....
"கொள்கையில் தோத்தவன் என்று யாருமே இல்லை"..
கொள்கையிலே திருப்தி கொள்ளாதவன் தனது எண்ணத்தை பல வழிகளிலே முயல்கின்றான்..
அவனது முயட்சிஜிலே நேர் வழியோ, மறை வழியோ இருக்கும்..
எல்லா முயட்சிஜிலும் திருப்தி பெறாதவன் தனது ஏமாற்றங்களை மெழுகிட்டு மறைக்கும் சூட்ஷுமங்களில் இறங்குகின்றான்.
இதுவே மானிட வாழ்வில் நிகழும் இயல்பு.
பல பாடலாசிரியரும் இதை தங்கள் பாடலில் கூறுகின்றனர்.
"அவரவர் வாழ்கையில் ஆஜிரமாயிரம் மாற்றங்கள்"
"வாழ்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்"
"வாழ தெரிந்தால் வாழலாம், வழியா இல்லை உலகிலே.."
"வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா, வாழ்வது அவரவர் கையிலடா.."
உங்கள் அருமை தோழன் சுமன்

No comments:

Post a Comment