Pages

Monday, 21 March 2011

தேன் கேட்கும் மலர்கள்!

தாய் தந்தை தவறவிட்டனரா? இல்லை தவறிவிட்டனரா?

'வாழ்கை வழி காட்டும்' என்று விட்டனரா?
இல்லை 'வழியில் கிட' என்று விட்டனரா?

இன்ப விபத்துக்கள் தயாரித்த
மழலை நோயாளிகளா இவர்கள்?

வாழ்க்கை முடியும் வரை வாழ முடியுமா?
விடை எங்கேயென்று தெரியுமா?

பதினான்கு வயதுக்கு கீழ் பணியிலமர்த்துவது
குற்றம் என்றார்.
அது சரி, பிச்சையெடுப்பது பணி அல்லவே!

சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்!
இவர்கள் அழுதுகொண்டே இருக்கின்றார்களே?

மலர்கள் தேன் கேட்டால் கொடுத்து விடுங்கள்
பாவம்! மலர்கள் சிரிக்கட்டும்.

கொடுமையில் கொடுமை, இளமையில் வறுமை
ஆனால், இவர்களுக்கோ இப்போதே வறுமை!


No comments:

Post a Comment