Pages

Saturday 3 November 2012


விடியலே வேண்டாம் என்றேன் 
என் கனவில் நீ வந்தபோது.... 
உறவே வேண்டாம் என்றேன் 
என் உயிராக நீ வந்தபோது.... 
மரணமே வேண்டாம் என்றேன் 
என் மனதில் நீ வந்தபோது.... 
ஆனால், 
காதலே வேண்டாம் என்றேன் 
என் கல்யாணத்திற்கு நீ வந்தபோது..... 
மாப்பிள்ளை தோழனாக........!

Sunday 11 March 2012

நீயே என் உலகம்


உலகம் போற்றும் வாலிபனாக தான் ஆசை. 
உன்னை காணும் முன்பு வரை.. 

உன்னை கண்ட பிறகோ, 
உலகம் சுற்றும் வாலிபனாகி விட்டேன்.. 
* நீயே என் உலகம் ஆகி விட்டதால் 
சுமன் *

ஒவ்வொரு நொடியும் உன்னகாக


ஒவ்வொரு நொடியும் உன்னகாக 
சுவாசிக்க ஆசை!! 
அந்த ஒரு நொடியில் எனக்கு பிடித்தது எதுவென்றால் உன் பெயரை சொல்ல ஆசை !!! 
உனக்காக 
கண் விழியில் நீரோடை காண ஆசை!!! 
நான் உனக்காக எழுதும் கவிதைகளையும் 
நீ படித்து அதிலிருந்து எனக்காக நீ எழுதும் 
ஓரிரு வரிகளை காண ஆசை !!! 
நாம் இருவரும் தனிமையாக கை கோர்த்து 
நடக்கையில் ஆசை வெள்ளத்தில் நானும் 
ஆனந்த கலையில் நீயும் 
இருக்கும் அந்த நிமிடத்தை காண ஆசை !!!
சுமன் ...

காதல் கவிதை


நீ நிலவாக இருப்பாயானால், 
எனக்கு, நீர் தேங்கும் குளமாகவே ஆசை 
காரணம் 
எனக்குள் உன்னை காண்பதற்கு! 
சுமன் ...

ஆசை.......



அன்பே 
உன் அன்பில் வாழ ஆசை 
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் 
உன் அழமான அன்பில் வாழ ஆசை.
சுமன் 

மண்ணில் பிறப்பதற்கு ஒரு பொருள்


பிறப்பிற்கு ஒரு பொருள் வேண்டும் 
அப்பிறப்பு நல் பிறப்பாய் அமையவேண்டும் 
சாதாரண பிறப்பில் தான் நாம் அனைவரும் 
அன்னையின் சாதனை படைப்பு தான் நாம் 
கற்றதோர் கல்வி , சிறந்ததோர் பாடம் 
ஆசிரியர் கல்வி , பகுத்தறிவில் சிந்தனை 
கற்பனை ஓவியமாக , கவிதையாக 
சிற்பியும் வடிப்பான் கற்பனையில் சிலையை 
அவன் சென்ற பிறகு கால சுவடுகள் ஆகின்றன .... 
ஏழு பிறப்பில் சிறந்ததோர் மனித பிறப்பு 
ஆர் அறிவு கொண்டதால் 
ஆர் அறிவில் ஓர் அறிவு கற்பனை 
கற்பனையில் தான் மனிதன் முழு பிறப்பு 
அடைகிறான் . என்பதே என் கருத்து ...........
சுமன் 

கற்பனை .................


கவிதை என்பது கற்பனை பெண்மை 
கண்களில் நீர் சுமந்து உயிரோடு உயிராக 
உறவுக்குத் தடையாக மடித்தெடுத்துக்கொண்டு 
கவிதைகளும் உறக்கத்தை கலைக்கின்றது 
உள்ளதை உள்ளதே கலையாத கற்பனை 
கனவு கன்னி என் கனவில் ............ சுமன் ......