Pages

Monday, 14 March 2011

ஆசை

இழை உதிர் காலத்தில்
மரத்தின் நிழலில்
நிற்க ஆசை

பாலைவனத்தில்
பனிக்கட்டி மழையில்
நனைய ஆசை

அமாவாசை இரவில்
நிலா சோறு
உண்ண ஆசை

கடற்கரை மணலில்
அழியாத கவிதை
எழுத ஆசை

இரவில் பொழியும்
மழையில் வானவில்
பார்க்க ஆசை

நட்சத்திரங்கள் ஜொலிக்க
வான்மழை
பார்க்க ஆசை

பூமியில் மனிதர்களை
பார்க்க ஆசை

No comments:

Post a Comment