Pages

Thursday 28 April 2011

வரமாய் வந்தவள் நீ.....

ஆசைகளை சொன்ன அன்னக்கிளியே....
என் நேசமது உனக்கு புரியவில்லையா...
ஆயிரம் பிறவிகள் அளவு வேண்டாமடி...
எத்தனை பிறவிகள் ஆனாலும் - அது
ஐந்தறிவு ஆறறிவு ஆனாலும்
உன் துணை நான் தானடி...!

பாசம் மட்டுமல்லடி பகிர்ந்துகொள்ள
பலவகைகள் உண்டு!
பசி - புசி, துக்கம் - தூக்கம்
இன்பம் - துன்பம், அழுகை - சிரிப்பு
நிறைவு - குறைவு, காதல் - காமம்
பகிர்ந்து பருகுவோமடி...!

நிழலாய் மட்டுமல்ல நீக்கமற
இணைந்து ஒன்றாய் சுவாசித்து
யாசித்து உணர்வோமடி...!
நீர் முத்துக்களை மெல்லமாய்
முத்தமிட்டு சுவைப்பவளே...
உன் இதழ்வழி நுழைந்து - என்
உயிர் மூச்சால் உன்னை அனுதினமும்
குளிர்வித்து குளிர்வேனடி....!

அணியும் ஆடை மட்டுமல்ல
என் ஆன்மாவும் நீதானடி...!
உப்பாய் இருந்து உயிருள்ளவரை
நினைக்கச் செய்தவளே
என் அறுசுவையும் நீதானடி...!

சுட்டெரிக்கும் வெயிலில்
சுற்றி வந்தால் உன் மேனி
கருத்து விடுமடி...! அதன்பால்
என் இதயமும் கருத்து விடுமடி...!

வியர்வை முத்துக்கள் மட்டுமல்ல
என் கண்ணின் மணிகளையும்
எடுத்துத் தருகிறேனடி ...!
சேர்த்து கோர்த்து - உன்
வெண் சங்கு கழுத்தை மிளிரச் செய்யடி...!

காணும் கலைகள் மட்டுமல்ல - நான்
பார்க்கும் பாரதமும் நீதானடி...!
விரிந்த மார்பு, விரல்கள்,
தாயுமானவன் மடி போதாதடி...!
உச்சி முதல் பாதம் வரை
உன் ஒருத்திக்கு மட்டும் தானடி...!

கண்ணிற்குத் தெரியாத கடவுள் வேண்டாமடி..!
கண்ணிற்குத் தெரிந்த - என்
காவிய தெய்வமே நீ தானடி...!
அன்னையாய்...அம்பிகையாய்
மனைவியாய் ... மந்திரியாய்
என்னை ஆட்கொண்டவளே...

உதிரம் சுமக்க ஆசைப்பட்டு
என்னை உச்சியின் சிகரத்திற்கு
உயர்த்திய என் உயிரே.........
வரமாய் வந்தவள் நீயடி...
என் வாழ்விருக்கும் வரை - உன்னை
வாட விடமாட்டேனடி....

நீ எங்கே போனாய்

நீயோ நெடுந்தூரம்
என் நாட்கள் எப்படி ஓடும்

மலராய் இருந்தால் பறித்துவிடுவேன்
நிலவாய் அல்லவா இருக்கிறாய்

தினம் உன் தரிசனம் கண்டு
துயில் கொள்வேன்
இன்று ஏனோ நீ வரவில்லை

மனம் துடிக்கிறது
உறங்க மறுக்கிறது

இன்று ஒரு நாள் மட்டும்
இறந்து போகிறேன்
நாளை வந்து உயிர்த்தெழுப்பு
உன் ஒளிக்கதிர்களால்...

உன் மேல் கொண்ட காதல் தொலையாது

என் உடலோடும் உணர்வான காதலோடும் போராடுகிறேன் போராட்டத்தில் வலி தெரிகிறது
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!

ஏன் பிரிவை கொடுக்கிறாய் தோழி

தோழியே

பிரிவின் வலி அறிந்தவள் நீ

பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்

விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்

விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்

தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்

தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்

என்று மீண்டும் வருவாய் என் வாசல்

தேடி

காத்திருக்கிறேன் உனது வருகைகாக

அல்ல உன் தோள்மீது சாய்ந்து

விசும்பி அழ

உன்னை நினைக்கையில்

உன்னை நினைக்கையில்
உறக்கம் கலைகிறது -
உயிரைத் தேடித்
பாசம் அலைகிறது!
நெஞ்சம் கொண்டிருக்கும்
நேசத்தின் முன்னே,
கொஞ்சம் பொய்பேசும்
வேஷம் கலைகிறது

தோழியே நீ இன்றி கண்ணீர் விட மனமில்லை

தோழியே நீ இன்றி

கண்ணீர் விட மனமில்லை

துடைக்க நீ இல்லை என்பதால்

உறங்கிவிட மனமில்லை

உயிரே நீ அருகில் இல்லை

உண்ணும் உணவு பிடிக்க வில்லை

உன் உரையாடல் கேட்காமல்

ஒன்றும் செய்ய விருப்பமில்லை

ஒருநொடி கூட உன் நினைவு

அகலாமல்

சிலையாகிறேன் உயிருடன்

வா ரசித்து விட்டு போ

Tuesday 5 April 2011

தேவதையை காதலிக்கிறேன்

என் நண்பன் கேட்டேன்
நீ காதலிக்கிறாயா? என்று
ஆம், என்றேன்
யார் அந்த பெண்? என்றான்.
நான் காதலிப்பது பெண்ணை அல்ல
ஒரு தேவதையை காதலிக்கிறேன்
என்றேன் சிறிது கர்வத்துடன்

காதல் செய்த பாவம்

காதல் செய்த பாவத்துக்கு
நெஞ்சம் வலிக்குது!...
நிம்மதியை தேடித்தேடி
வாழ்க்கை கசக்குது!...

காதல் ஒரு கண்ணாமூச்சி
வாழ்க்கை என்றும் கட்டாப்போச்சி

காதல் நெஞ்சில்
கஷ்டம் வந்தால்
தென்றல் கூட தீயாகும்!..


கல்லறை தாண்டிய காதல்

எண்ணத்தை எடுத்தேன்-என்
எழுத்தினால் வளர்தேன்-நீ
சொன்னதை படைத்தேன்-நான்
சொர்கத்தை அடைந்தேன்.
என் பாதையை மறந்தேன்
உன் பயணத்தை தொடர்ந்தேன்
என்னை நான் தொலைத்தேன்
உன்னில் தான் நுழைந்தேன்.
விண்ணை நான் அளந்தேன்
உன் விரலில் தான் ஒளிந்தேன்
உன்னை நான் இழந்தால்- ஓர்
விதையாய் நான் விழுவேன்-பூஞ்
செடியாய் தான் எழுவேன் அழகு
மலராய் தான் அடைவேன்.

காதல் கவிதைகள்..

காதல் கவிதைகள்..

"எந்த கவிதைகளிலும்..
உனை பார்த்து விடுகிறேன்..!!!

ஆனால்...
...நீ பார்ப்பதை மட்டும் ...
என்னால்
கவிதையாக்க முடிவதில்லை..
நானே ... கவிதையாகி விடுவதால்..!!!

பிறப்பு...

என் மரணம் அவள்
மடியில் என்றால்...?
மீண்டும் எனக்கு
ஜனனம் தான்
"தாய் மடியில்!"

தமிழின் சுவை மாறாமல்.....

மாறாத செந்தமிழின்

சொறசுவையினை

சுவை மாறாமல்

உச்சரிக்கும் அவளின் உதடுகள்...

சொர்ப்பனத்தில் சொர்கலோகம்....

நாற்காலியும்

சொர்ப்பனத்தில்

சொர்கலோகம் சென்றதாம்..

உன்னையும்

ஓர்நாள் இடுப்பில்

சுகமாக சுமந்துவிட்டேன் என..