Pages

Tuesday 29 March 2011

தொலைகிறேன்.....

உன் ஞாபகங்கள்
என்னைத் தாலாட்ட
உன் அழகோ
என்னை வதைக்க
தேடலில் தொடங்கி
தேடுவதால்
தொலைகிறேன்............!!!

உடையாத கண்ணாடி ..!

இந்த மனிதர்களோடு ...
பேசி
பழகி
மகிழ்ந்து
கோபித்து
உற்சாகப்பட்டு
உதறிவிட்டு
காதலித்து .....
நினைவு தெளிந்த
நாள்தொட்டு
திரும்பி பார்க்கையில் .....
கண்ணாடியே !
உன் மீது
காதல் வருகிறது
நீ மட்டுமே
நன் அழும்போது
எதிரில் நின்று
சிரிக்கவில்லை .......

Saturday 26 March 2011

கடலும் கண்ணீர் வடிக்கின்றதாம்...

கடல் நீரும்

கண்ணீர் ஆனதாம்.....

கடலுக்குள்

அவள் காலடி படாதா என.... 

நிலவோ உன்னை தேடுகிறது

நீ இல்லாத இந்த இரவில் நான் நிலவின் துணை தேடுகிறேன் நிலவோ உன்னை தேடுகிறது! நீ இல்லாத இந்த இரவில் நான் நிலவின் துணை தேடுகிறேன் நிலவோ உன்னை தேடுகிறது..!!!!

சிறுவதில் பூத்த காதல்

சிறுவயதிலேயே
எங்களுக்கு திருமணம்
செய்து வைப்போம்
என்று சொன்ன
எங்கள் பெற்றோர்களால் கூட--இன்று
அவன் வேறோருத்தியை
திருமணம் செய்ய போவதை
தடுக்க முடியவில்லை.....
5 வயதிலேயே
எனக்கு பூத்த காதல்--இன்று
வேரோடு சாய்ந்து விட்டது........ 

காதல் மொழிகள்

உன்னிடம் நான் பேசிய
காதல் மொழிகள் எல்லாம்
உன் காதை தொட்ட
சந்தோசத்தோடு
வெளி வழியில்
உலவி கொண்டு இருக்கின்றன ....

இதை என்றாவது கேட்கும்
வரும் கால காதலர்கள்
புரிந்து கொள்ளட்டும் ...
எப்படி காதலிக்க வேண்டும் என்று .......!!

கண்ணீரும் தித்திக்குதே....


உன்
கன்னத்தில்
வழிந்தோடும்
கண்ணீரும்....
கற்கண்டு போல்
தித்திக்குதே....


Tuesday 22 March 2011

திரும்பி பார்க்காதே...

நந்தவனமே...
நீ நடந்து
போகும்போது என்னை
திரும்பி பார்க்காதே
நான் திசை மாறி
போகிறேன் வழி
தெரியாமல்!


உன் முகத்தை தவிர கவிதை இல்லை ...!

கவிதை
எழுத
காகிதம் எடுத்தேன்
அதில்
உன் முகம்...!
சரி என்று
நீல
வண்ண
வான
காகிதத்தை
எடுத்தேன்
அதிலும்
உன் முகமே...!
தோன்றியது
அப்போது தான்
புரிந்தது
உன் முகத்தை
தவிர
வேறொரு
கவிதை
இவ்வுலகில்
இல்லை
என்று...!


Monday 21 March 2011

வாழ்கை

உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்கையும்
ஒரு புதிர்தான்....


தேன் கேட்கும் மலர்கள்!

தாய் தந்தை தவறவிட்டனரா? இல்லை தவறிவிட்டனரா?

'வாழ்கை வழி காட்டும்' என்று விட்டனரா?
இல்லை 'வழியில் கிட' என்று விட்டனரா?

இன்ப விபத்துக்கள் தயாரித்த
மழலை நோயாளிகளா இவர்கள்?

வாழ்க்கை முடியும் வரை வாழ முடியுமா?
விடை எங்கேயென்று தெரியுமா?

பதினான்கு வயதுக்கு கீழ் பணியிலமர்த்துவது
குற்றம் என்றார்.
அது சரி, பிச்சையெடுப்பது பணி அல்லவே!

சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்!
இவர்கள் அழுதுகொண்டே இருக்கின்றார்களே?

மலர்கள் தேன் கேட்டால் கொடுத்து விடுங்கள்
பாவம்! மலர்கள் சிரிக்கட்டும்.

கொடுமையில் கொடுமை, இளமையில் வறுமை
ஆனால், இவர்களுக்கோ இப்போதே வறுமை!


Saturday 19 March 2011

பிரமனிடம் ஒரு வரம்


உன்னில் நான் இல்லை
உன் கண்ணிலும் காதல் இல்லை
மண்ணில் நான் இருந்து என்ன பயன்
உனக்கு பிடித்தவனோடு
உனக்கு பிடித்த குழந்தையாக
உன் மடியில் தவழும்
வரங்கள் கேட்பேன்
...........

என் தேகத்தில்...........

என் தேகத்தில் உள்ள காலங்கள் எல்லாம் உன்னைத்தான் உச்சரிக்கும்
என்னுள் அலையடித்து ஓடும்உதிரமெல்லாம் உனக்கான ஏங்கும்
என் முளைகூட உன் நினைவை மட்டும்தான் பதிவாக்கிகொள்கிறது
என் இதய தலத்தில் உன் உருவ பாடகை மட்டும் ஏந்துகிறது
என் உடலின் அணைத்து பாகங்களும் உன்னை அணு அணுவாக நேசிக்கிறது
நீ அழுதால் அன் நொடியில் என் உடலில் பல இடங்களில் தீயால் சூடும் உணர்வ
நீ எனை பிரிந்தால் இவை அனைத்தும் தனது வேலையை நிறுத்திகொள்ளும் .....sr

Friday 18 March 2011

அன்பு..............

உன்னால் முடியாது.........

எட்டாத துரத்தில் பிரிவு வேண்டும்

அழகான  ஒரு சூரியன் 
எனை பார்த்து சிரித்தது 
சிரிப்பின் சிதறலில்  அகிலத்தை விநாடி கணக்கில் கண்டேன் 
உனக்காக நானும் 
எனக்காக நீயும் 
வாழ்த்தால் போதும் என்றது மனது 
வன்முறை வன்முறை நடக்கட்டும் 
சில நொடியில் முடியட்டும் 
பிரிவு மட்டும் எட்டாத துரத்தில் இருக்கட்டும் 

Monday 14 March 2011

என் காதல் பூக்கள்...

                                         

காலையில் தோன்றி...
இரவில் மறையும் சூரியனைப்போல...
இரவில் தோன்றி....
விடியலில் மறையும் கனவினைப்போல தான்!
என் காதலும்.....

என் காதல் பூக்கள்...
கல்லறை பூக்கள் ஆனாலும்!
என் காதல் மட்டும்...
உயிர்த்திருக்கும்....


காதல் தோல்வி ஆனாதால் .................

பார்க்கும் போதெல்லாம்
கை குலுக்கி கொண்டோம் நாம்
நண்பர்களாக இருந்த போது

பார்க்கும் போதெல்லாம்
கட்டி பிடித்து கொண்டோம்
நாம் காதலர்கள் ஆனா போது

இப்போது பார்க்கும் பொழுதெல்லாம்
விலகி செல்கிறோம்
நம் காதல் தோல்வியானதால்...............

என் வாழ்வோடு பயணிக்கும் அவள் நினைவு

தென்றல் காற்றோடு
கதைபேசி அசைந்தாடும்
அவள் கூந்தல் முடிகலோ
அவள் தேகம் பற்றி உலர்கிறது
உதிர்ந்த கூந்தல் முடிகலோ
என் சோகம் பற்றிகொள்கிறது....

சோகமுடிவாய் உதிர்ந்த முடிகள்
என்னோடு சேர்ந்துகொள்ள
அதை நான் பொக்கிஷமாய் பாதுகாக்க
அவள் பிரிவின் பரிசாய்
என் கண்ணீர் துளிகளும் அதில்
கலந்திருக்கும் அவள் நினைவு துளிகளும்
என் வாழ்வோடு பயணிக்கிறது....


உன் வருகை வேண்டி!

ஒரு அழகான காலை பொழுதில்

உன் வருகைக்காக காத்திருப்பேன்

நினைவில் சுகம், கனவில் கற்பனை!

பித்தனின் மனசுகம் - என் இருக்கையில்

பக்கம் வருவாயா! முத்தம் இடுவாயா!!

என்னவளே

என்னவளே

நீ திட்டும் போது

ரசிக்க தெரிந்த எனக்கு

நீ மௌனமாக இருக்கும் போது

என்னால் ரசிக்க முடியவில்லையே

ஏனெனில் .....

அந்த மௌனம் மரணத்தை விட

கொடுமையானது...


உண்மையான காதல் ....

மறப்பதும்
முடியாமல்
இறப்பதும்
மட்டுமே
காதல் இல்லை ......
மறக்காமல்
இருப்பதும்
இறக்கும் வரை
நினைப்பதும் ....
இறந்த பின்பு
நிலைப்பதுமே
உண்மையான காதல் ...... சுமன் 


முத்தமிடுவதை தவிர............

மார்கழி மாத

குளிருக்கு

இதமானது என்றால்

நீ என்னை

கட்டி அணைத்து

முத்தமிடுவதை தவிர

வேறென்ன இருக்கமுடியும்...

மெழுகு வர்த்தி

இது நியாயமா..?

ஏழையின் புன்னகை

உனக்கு தெரியுமா.......?

காதலின் வலிகள் சுகமானது........

தனித்து விட்டேன்............

உண்மை சொல்ல கண்கள்...!

உண்மை சொல்ல கண்கள்...!
பொய் சொல்ல பெண்கள்...!
அதை நம்ப ஆண்கள்...!
உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்...!
பொய் சொன்ன பெண்கள் மணவறையில்...!
நம்பிய ஆண்கள் கல்லறையில்...!


கண் சிமிட்டும் நேரம்

                                                         கண் சிமிட்டும் நேரத்தில்
                                             கூட காதலித்து கொண்டிருக்கிறேன்..

                                                       ஒரு முறையேனும் அவள்
                                                         என்னை பார்ப்பாள் என்று....

கண்களில் காந்த சக்தியோ.....

                                                           கண்களில்

                                                   காந்த சக்தியோ.....

                                             முன் அறிவிப்பில்லாமல்

                                              ஈர்த்துவிட்டால் என்னை.....

மறந்தேன் இறந்தேன்

அன்பே நான் எப்பொழுதும் உன்னை நினைத்திருப்பேன்
நான் என்றும் உன்னை மறக்க மாட்டேன்
அப்படி மறந்திருந்தால்
அன்று நான் இற‌ந்திருப்பேன்...


ஆசை

இழை உதிர் காலத்தில்
மரத்தின் நிழலில்
நிற்க ஆசை

பாலைவனத்தில்
பனிக்கட்டி மழையில்
நனைய ஆசை

அமாவாசை இரவில்
நிலா சோறு
உண்ண ஆசை

கடற்கரை மணலில்
அழியாத கவிதை
எழுத ஆசை

இரவில் பொழியும்
மழையில் வானவில்
பார்க்க ஆசை

நட்சத்திரங்கள் ஜொலிக்க
வான்மழை
பார்க்க ஆசை

பூமியில் மனிதர்களை
பார்க்க ஆசை

Sunday 13 March 2011

உன்முகத்தின் பிரகாசத்தால்.....!

பௌர்ணமி அன்று

மட்டும்

அந்த வானத்துக்கு

வெளிச்சம் இல்லை....!


எனக்கு மட்டும்

தான் கிடைக்கும்

வெளிச்சம்

அன்று மட்டும்............!


உன்முகத்தின் பிரகாசத்தால்.............!


என்னவளின் முகம்...

என்னவளின் முகம்...
கண்ணாடியில்
என் கவிதையின்....
பிரதிபலிப்பாக


 

என் உயிர் தாய்

கண் மூடி யோசித்தேன்
என் தாயை
கண் துடைத்து ஆறுதல்
சொன்னால்
கவலைப்படாதே என்று
என் உயிர் தாய்

பெண்ணின் மனம்....

வானம் என்பது தூரம் அல்ல
பூமி என்பது ஆழம் அல்ல
ஆழம் என்று நான் கண்டது
அந்த பெண்ணின் மனம் மட்டுமே

விலகிசெல்லும் போது அணைக்க துடிப்பதும் பெண்ணே
அணைக்க துடிக்கும் போது விலக சொல்லவதும் பெண்ணே

அந்த பெண்ணின் மனதை அளக்க அளவை இருந்தால் சொல்லுங்கள் அளந்து பார்க்கலாம் என்னதான் ஆழம் என்று
தெரிந்து கொள்ளட்டும் அப்பாவி ஆண்கள்!!!!!!!!!!!!!!!!


பித்தனாய் அலைகின்றேன்......

நீ உன் மன நிலத்தில்
என்னை தான் வித்தாக
புதைத்து வைத்து இருந்தாய் என
கனவு கண்டு இருந்தேன்.

நீ
என்னை பார்க்கும் போதெலாம்
லட்சம் பனிக்கட்டி படுகையில்
படுத்து புரள்வதாய் கனவு கண்டேன்

உன் அடிமனதில்
ஆழ ஊன்றிய அசுர அன்பை
வெளிகாட்டது நடப்பது ஏன்?
உன் பார்வையின் கட்டு அவிழ்ந்து
பார்க்காது போன்னமையால்
பித்தனாய் அலைந்து நிற்கின்றேன்

எத்தனையோ அசுர சொற்களின் பொருள்கண்டு
புதைந்து இருந்த பொக்ஹிசம் கண்டு
பூரித்த எனக்கு
உன் அன்பு சுரங்கத்தில் பிறக்கும்
உள்ளத்து தேனை எடுக்க முடிய வில்லை ஏன்?
நான் பித்தனாய் அலைகின்றேன்....................?


என் கைகளை தவிர!

அன்றோ அவள்
கண் கலங்கிய
போது என்னை
அறியாமல்
என் கைகள்
அவள் கண்ணீரை
துடைத்தன!
ஆனால்,
இன்றோ அவள்
இல்லாமல் நான்
கண் கலைங்குகிறேன்
என் கண்ணீரை
துடைக்க யாரும் இல்லை!
என் கைகளை தவிர!!!


Saturday 12 March 2011

பூக்களும், நார்களும்!

"பூவோடு சேர்ந்த நாரும்
மணம் பெறும்..."
சிரித்தன பூக்கள்!

"நாங்கள் இல்லையென்றால்
நீங்கள் உதிரிப்பூக்களே..."
நினைத்தன நார்கள்!


எப்படி உனக்கு பிடிக்கிறது

 அன்பே

பூக்களை நீட்டி காதல் சொல்வது

உனக்கு பிடிக்கும்

அனால் பூக்களின் மரணம்

எனக்கு பிடிக்காதே

எப்படி உனக்கு பிடிக்கிறது

காதலை அல்ல பூக்களை

காதலுடன் நான்

                     
                                          ஒரு வார்த்தை பேசும் தருணத்தில்

                                         ஓராயிரம் வார்த்தைகள் பேசுகிறாய்

                                                           விழிகளால்

                                              எந்த கேள்விக்கு பதிலுரைக்க

                                               மௌனமாய் பதிலின்றி

                                           உன்மேல் காதலுடன் நான்

முத்தம் ..........

                                                        

உன் இதழ்களின் ....
ரகசியங்கள் ஆகவே........
நித்தம் நித்தம் ........
சத்தம் இட்டு கொண்டு ......
இருக்கின்றன ......

என் இதயத்தில் ....
....


நிலா தோழி




தனது தோழியை தேடித்தேடி
தினமும் வானில் உலா வருகிறது நிலவு!
நீ பூமியில் வலம் வருவது தெரியாமல்!!




Friday 11 March 2011

பூக்கள்

அறுபது ஆண்டுகளுக்கு

ஒரு முறை

பூக்கும் மூங்கில்

பூக்கள் கூட

தினம்தினம் பூக்கும்

உன்அழகை கண்டால்.............!!