Pages

Friday 16 December 2011

கண் பேசும் கவிதை

கண் பேசும் கவிதை 


மற்றவர்கள் மயங்கினார்கள் 
மயக்கும் என் கவிதைக்கு. 
மயங்கியே தான் போனேனடி 
மங்கை உன் கண்ணுக்கு. 

காதல்


வானத்தில் நீல வர்ணாம் 
மனசுக்குள் உந்தன் எண்ணம் 
வானம் இருக்கும் வரைக்கும் 
நிலைத்திருக்கும் அந்த வர்ணம் 
நான் இருக்கும் வரைக்கும் 
நிலைத்திருக்கும் உந்தன் எண்ணம் 
உந்தன் இரன்று கண்களுக்கு 
என் உயிரை இன்றே 
பரிசாக தருகிறேன் 


பெண்களின் மனம்


பெண்களின் மனம் -அவர்களுக்கே 
புரியாத ஒன்று 
பாவம் அதில் எப்படி கிடைக்கும் -ஆண்களுக்கு 
இடம் ஒன்று 
அதனால் அவர்கள் மனம் 
புரிதலே நன்று

கொள்வாயோ..கொல்வாயோ.

எதை வேண்டும் என்றாலும் எடுத்து கொள்.. 
என்னிலிருந்து உன்னை தவிர.. 

எதை வேண்டும் என்றாலும் தள்ளி விடு.. 
உன்னிலிருந்து என்னை தவிர... 

அனைத்தும் சொல்லும் அன்னையிடம் கூட 
சொல்ல முடியவில்லை என் வலிகளை.. 

அன்பாய் கேட்கும் நண்பனிடம் கூட 
சொல்ல முடியவில்லை என் வேதனைகளை... 

ஆறுதல் தரும் கவிதைகளில் கூட 
சொல்ல முடியவில்லை.. என் கண்ணீரை... 

புரியாமல் பார்க்கிறாய்.. 
உன்னிடம் கூட சொல்ல முடியவில்ல.. என் காதலை.. 

கடைசியா சொல்லனும்னா.... 

கொள்வதனால்...காதலித்து கொள்... 
கொல்வதனாலும்... காதலித்து கொல்.


பிடிக்காதா ... உனக்கு...........


நான் 

உன்னை விருமபும் போது 

நீ 

என்னை விருமபவில்லை 

இன்று 

நீ என்னை விருமபும் போது 

நான் உன்னை விருமபவில்லை 

என்னோ 

இன்று 

என் இதயம் கல்லாகி போனோதோ...................... suman

இனிமை அவர்கள் சிரிப்புகள்


கறுப்புக் கலர் அவள் உதடுகள் 
தேனில் ஊறிய 
பேரிச்சம் பழங்கள் 
சிவப்புக் கலர் இவள் உதடுகள் 
தேனில் ஊரா 
செர்ரிப் பழங்கள் 
என் விழிகளே உதடுகள் 
இனிமை அவர்கள் சிரிப்புகள்