Friday, 16 December 2011
கொள்வாயோ..கொல்வாயோ.
எதை வேண்டும் என்றாலும் எடுத்து கொள்..
என்னிலிருந்து உன்னை தவிர..
எதை வேண்டும் என்றாலும் தள்ளி விடு..
உன்னிலிருந்து என்னை தவிர...
அனைத்தும் சொல்லும் அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை என் வலிகளை..
அன்பாய் கேட்கும் நண்பனிடம் கூட
சொல்ல முடியவில்லை என் வேதனைகளை...
ஆறுதல் தரும் கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை.. என் கண்ணீரை...
புரியாமல் பார்க்கிறாய்..
உன்னிடம் கூட சொல்ல முடியவில்ல.. என் காதலை..
கடைசியா சொல்லனும்னா....
கொள்வதனால்...காதலித்து கொள்...
கொல்வதனாலும்... காதலித்து கொல்.
Thursday, 1 September 2011
என் தாயானவனே நீ என்ன
அதிசய பிறவியாடா ?உன்னை
நேசிக்க ஆரம்பித்து நாட்கள்
மணித்தியாலங்கள் ஆகி
மணித்தியாலங்கள் மாதங்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகியும்
உன்னை அருகில் வந்து
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?
அதிசய பிறவியாடா ?உன்னை
நேசிக்க ஆரம்பித்து நாட்கள்
மணித்தியாலங்கள் ஆகி
மணித்தியாலங்கள் மாதங்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகியும்
உன்னை அருகில் வந்து
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?
ஏதோ ஒரு மோகம்
ஏதோ ஒரு தாகம்
சேர்ந்து இசைக்கும்
ராகமாய் காதல் பிறக்கும் .
அங்கே ....
சோகமே மேகமாய்
தோன்றி காற்றில்
கரைந்து கானல் நீராய்
கண்ணில் வடியும்
மழை துளியகிறது ....!
Thursday, 2 June 2011
Saturday, 28 May 2011
Friday, 20 May 2011
காதலியே......
என் கனவினில் வந்தாய்
தூக்கம் தொலைத்தேன்!
என் நினைவினில் வந்தாய்
நிதானம் இழந்தேன்!
எப்போது என் எதிரில் வருவாய்
என எதிர்பாத்திருந்தேன்!
வந்தது உன்னிடமிருந்து
அந்த தொலைபேசி அழைப்பு!
நீதானா என நிதானிப்பதற்குள்
துண்டிக்கப்பட்டது அந்த இணைப்பு!
நீ துண்டித்தது தொலைபேசி இணைப்பை
மட்டும் அல்ல என்னையும்தான்.......!!!
தூக்கம் தொலைத்தேன்!
என் நினைவினில் வந்தாய்
நிதானம் இழந்தேன்!
எப்போது என் எதிரில் வருவாய்
என எதிர்பாத்திருந்தேன்!
வந்தது உன்னிடமிருந்து
அந்த தொலைபேசி அழைப்பு!
நீதானா என நிதானிப்பதற்குள்
துண்டிக்கப்பட்டது அந்த இணைப்பு!
நீ துண்டித்தது தொலைபேசி இணைப்பை
மட்டும் அல்ல என்னையும்தான்.......!!!
Thursday, 28 April 2011
வரமாய் வந்தவள் நீ.....
ஆசைகளை சொன்ன அன்னக்கிளியே....
என் நேசமது உனக்கு புரியவில்லையா...
ஆயிரம் பிறவிகள் அளவு வேண்டாமடி...
எத்தனை பிறவிகள் ஆனாலும் - அது
ஐந்தறிவு ஆறறிவு ஆனாலும்
உன் துணை நான் தானடி...!
பாசம் மட்டுமல்லடி பகிர்ந்துகொள்ள
பலவகைகள் உண்டு!
பசி - புசி, துக்கம் - தூக்கம்
இன்பம் - துன்பம், அழுகை - சிரிப்பு
நிறைவு - குறைவு, காதல் - காமம்
பகிர்ந்து பருகுவோமடி...!
நிழலாய் மட்டுமல்ல நீக்கமற
இணைந்து ஒன்றாய் சுவாசித்து
யாசித்து உணர்வோமடி...!
நீர் முத்துக்களை மெல்லமாய்
முத்தமிட்டு சுவைப்பவளே...
உன் இதழ்வழி நுழைந்து - என்
உயிர் மூச்சால் உன்னை அனுதினமும்
குளிர்வித்து குளிர்வேனடி....!
அணியும் ஆடை மட்டுமல்ல
என் ஆன்மாவும் நீதானடி...!
உப்பாய் இருந்து உயிருள்ளவரை
நினைக்கச் செய்தவளே
என் அறுசுவையும் நீதானடி...!
சுட்டெரிக்கும் வெயிலில்
சுற்றி வந்தால் உன் மேனி
கருத்து விடுமடி...! அதன்பால்
என் இதயமும் கருத்து விடுமடி...!
வியர்வை முத்துக்கள் மட்டுமல்ல
என் கண்ணின் மணிகளையும்
எடுத்துத் தருகிறேனடி ...!
சேர்த்து கோர்த்து - உன்
வெண் சங்கு கழுத்தை மிளிரச் செய்யடி...!
காணும் கலைகள் மட்டுமல்ல - நான்
பார்க்கும் பாரதமும் நீதானடி...!
விரிந்த மார்பு, விரல்கள்,
தாயுமானவன் மடி போதாதடி...!
உச்சி முதல் பாதம் வரை
உன் ஒருத்திக்கு மட்டும் தானடி...!
கண்ணிற்குத் தெரியாத கடவுள் வேண்டாமடி..!
கண்ணிற்குத் தெரிந்த - என்
காவிய தெய்வமே நீ தானடி...!
அன்னையாய்...அம்பிகையாய்
மனைவியாய் ... மந்திரியாய்
என்னை ஆட்கொண்டவளே...
உதிரம் சுமக்க ஆசைப்பட்டு
என்னை உச்சியின் சிகரத்திற்கு
உயர்த்திய என் உயிரே.........
வரமாய் வந்தவள் நீயடி...
என் வாழ்விருக்கும் வரை - உன்னை
வாட விடமாட்டேனடி....
உன் மேல் கொண்ட காதல் தொலையாது
என் உடலோடும் உணர்வான காதலோடும் போராடுகிறேன் போராட்டத்தில் வலி தெரிகிறது
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!
ஏன் பிரிவை கொடுக்கிறாய் தோழி
தோழியே
பிரிவின் வலி அறிந்தவள் நீ
பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்
விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்
விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்
தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்
தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்
என்று மீண்டும் வருவாய் என் வாசல்
தேடி
காத்திருக்கிறேன் உனது வருகைகாக
அல்ல உன் தோள்மீது சாய்ந்து
விசும்பி அழ
பிரிவின் வலி அறிந்தவள் நீ
பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்
விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்
விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்
தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்
தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்
என்று மீண்டும் வருவாய் என் வாசல்
தேடி
காத்திருக்கிறேன் உனது வருகைகாக
அல்ல உன் தோள்மீது சாய்ந்து
விசும்பி அழ
Tuesday, 5 April 2011
கல்லறை தாண்டிய காதல்
எண்ணத்தை எடுத்தேன்-என்
எழுத்தினால் வளர்தேன்-நீ
சொன்னதை படைத்தேன்-நான்
சொர்கத்தை அடைந்தேன்.
என் பாதையை மறந்தேன்
உன் பயணத்தை தொடர்ந்தேன்
என்னை நான் தொலைத்தேன்
உன்னில் தான் நுழைந்தேன்.
விண்ணை நான் அளந்தேன்
உன் விரலில் தான் ஒளிந்தேன்
உன்னை நான் இழந்தால்- ஓர்
விதையாய் நான் விழுவேன்-பூஞ்
செடியாய் தான் எழுவேன் அழகு
மலராய் தான் அடைவேன்.
எழுத்தினால் வளர்தேன்-நீ
சொன்னதை படைத்தேன்-நான்
சொர்கத்தை அடைந்தேன்.
என் பாதையை மறந்தேன்
உன் பயணத்தை தொடர்ந்தேன்
என்னை நான் தொலைத்தேன்
உன்னில் தான் நுழைந்தேன்.
விண்ணை நான் அளந்தேன்
உன் விரலில் தான் ஒளிந்தேன்
உன்னை நான் இழந்தால்- ஓர்
விதையாய் நான் விழுவேன்-பூஞ்
செடியாய் தான் எழுவேன் அழகு
மலராய் தான் அடைவேன்.
Tuesday, 29 March 2011
Saturday, 26 March 2011
Tuesday, 22 March 2011
Monday, 21 March 2011
தேன் கேட்கும் மலர்கள்!
தாய் தந்தை தவறவிட்டனரா? இல்லை தவறிவிட்டனரா?
'வாழ்கை வழி காட்டும்' என்று விட்டனரா?
இல்லை 'வழியில் கிட' என்று விட்டனரா?
இன்ப விபத்துக்கள் தயாரித்த
மழலை நோயாளிகளா இவர்கள்?
வாழ்க்கை முடியும் வரை வாழ முடியுமா?
விடை எங்கேயென்று தெரியுமா?
பதினான்கு வயதுக்கு கீழ் பணியிலமர்த்துவது
குற்றம் என்றார்.
அது சரி, பிச்சையெடுப்பது பணி அல்லவே!
சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்!
இவர்கள் அழுதுகொண்டே இருக்கின்றார்களே?
மலர்கள் தேன் கேட்டால் கொடுத்து விடுங்கள்
பாவம்! மலர்கள் சிரிக்கட்டும்.
கொடுமையில் கொடுமை, இளமையில் வறுமை
ஆனால், இவர்களுக்கோ இப்போதே வறுமை!
Saturday, 19 March 2011
என் தேகத்தில்...........
என் தேகத்தில் உள்ள காலங்கள் எல்லாம் உன்னைத்தான் உச்சரிக்கும்
என்னுள் அலையடித்து ஓடும்உதிரமெல்லாம் உனக்கான ஏங்கும்
என் முளைகூட உன் நினைவை மட்டும்தான் பதிவாக்கிகொள்கிறது
என் இதய தலத்தில் உன் உருவ பாடகை மட்டும் ஏந்துகிறது
என் உடலின் அணைத்து பாகங்களும் உன்னை அணு அணுவாக நேசிக்கிறது
நீ அழுதால் அன் நொடியில் என் உடலில் பல இடங்களில் தீயால் சூடும் உணர்வ
நீ எனை பிரிந்தால் இவை அனைத்தும் தனது வேலையை நிறுத்திகொள்ளும் .....sr
என்னுள் அலையடித்து ஓடும்உதிரமெல்லாம் உனக்கான ஏங்கும்
என் முளைகூட உன் நினைவை மட்டும்தான் பதிவாக்கிகொள்கிறது
என் இதய தலத்தில் உன் உருவ பாடகை மட்டும் ஏந்துகிறது
என் உடலின் அணைத்து பாகங்களும் உன்னை அணு அணுவாக நேசிக்கிறது
நீ அழுதால் அன் நொடியில் என் உடலில் பல இடங்களில் தீயால் சூடும் உணர்வ
நீ எனை பிரிந்தால் இவை அனைத்தும் தனது வேலையை நிறுத்திகொள்ளும் .....sr
Friday, 18 March 2011
Monday, 14 March 2011
என் வாழ்வோடு பயணிக்கும் அவள் நினைவு
தென்றல் காற்றோடு
கதைபேசி அசைந்தாடும்
அவள் கூந்தல் முடிகலோ
அவள் தேகம் பற்றி உலர்கிறது
உதிர்ந்த கூந்தல் முடிகலோ
என் சோகம் பற்றிகொள்கிறது....
சோகமுடிவாய் உதிர்ந்த முடிகள்
என்னோடு சேர்ந்துகொள்ள
அதை நான் பொக்கிஷமாய் பாதுகாக்க
அவள் பிரிவின் பரிசாய்
என் கண்ணீர் துளிகளும் அதில்
கலந்திருக்கும் அவள் நினைவு துளிகளும்
என் வாழ்வோடு பயணிக்கிறது....
கதைபேசி அசைந்தாடும்
அவள் கூந்தல் முடிகலோ
அவள் தேகம் பற்றி உலர்கிறது
உதிர்ந்த கூந்தல் முடிகலோ
என் சோகம் பற்றிகொள்கிறது....
சோகமுடிவாய் உதிர்ந்த முடிகள்
என்னோடு சேர்ந்துகொள்ள
அதை நான் பொக்கிஷமாய் பாதுகாக்க
அவள் பிரிவின் பரிசாய்
என் கண்ணீர் துளிகளும் அதில்
கலந்திருக்கும் அவள் நினைவு துளிகளும்
என் வாழ்வோடு பயணிக்கிறது....
Subscribe to:
Comments (Atom)














































