Pages

Thursday, 28 April 2011

நீ எங்கே போனாய்

நீயோ நெடுந்தூரம்
என் நாட்கள் எப்படி ஓடும்

மலராய் இருந்தால் பறித்துவிடுவேன்
நிலவாய் அல்லவா இருக்கிறாய்

தினம் உன் தரிசனம் கண்டு
துயில் கொள்வேன்
இன்று ஏனோ நீ வரவில்லை

மனம் துடிக்கிறது
உறங்க மறுக்கிறது

இன்று ஒரு நாள் மட்டும்
இறந்து போகிறேன்
நாளை வந்து உயிர்த்தெழுப்பு
உன் ஒளிக்கதிர்களால்...

No comments:

Post a Comment